இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி 18 ஒட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் லக்னோ அணி சார்பாக அணித்தலைவர் கே.எல். ராகுல் அட்டமிழக்காது 103 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 200 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 37 ஓட்டங்களையும் டெவால்ட் ப்ரீவிஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
குறித்த போட்டியில் பெற்ற வெற்றியுடன் லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை அணி இறுதி இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.