நாடாளுமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அனைத்து நுழைவாயில்களுக்கும் வீதித் தடைகள் போட்டு மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.
புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு நாளைதினம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதனைத்தொடர்ந்து, நாளை மறுதினம் இது தொடர்பான இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்று பதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படவுள்ளார்.
இதேநேரம், நாட்டில் இன்று முதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.