எதிர்வரும் காலத்தில் எந்தவொரு தேர்தலிலும் மேலவை இலங்கை கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்க்கிழமை) இடம்பெற்ற முதலாவது நிறைவேற்று சபைக்கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
இதேவேளை சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று அமையும் பட்சத்திலேயே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம் ஆனால் அமைச்சு பதவிகளை ஏற்பதற்கு தாம் தயாரில்லை எனவும் கூறினார்.
எனவே எதிர்காலத்தின் நன்மை கருதி, கட்சியின் நடவடிக்கைகள் முன்னேடுக்கப்படும் எனவும் மேலவை இலங்கை கூட்டணியின் தலைவர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.