ஆண்களுக்கான பரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், அமெரிக்காவின் டொமி போல் மற்றும் கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் டொமி போல், ஸ்பெயினின் பாப்லோ கரேனோ புஸ்டாவை எதிர்கொண்டார்.
இப்போட்டியில் அமெரிக்காவின் டொமி போல், 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல, இன்னொரு போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், பிரான்ஸின் கோரெண்டின் மௌடெட்டுடன் மோதினார்.
இப்போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ், 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.