சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும், கொரோனாவின் புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரோன் தொற்று, இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரோன் தொற்று, குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துறைசார் வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையின் போது, நாட்டில் கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், கண்காணிப்பை தீவிரப்படுத்த அனைத்து அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பிஏ.5-ன் துணை வகையான பிஎப்7 தொற்று வேகமாக பரவக்கூடியதாகும். தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தும் திறன்கொண்டது.
அமெரிக்கா, பிரித்தானியா, பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே பரவியிருப்பதாகக் கருதப்படுகிறது.