தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான டுவைன் பிரிட்டோரியஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) தனது ஓய்வினை அறிவித்த 33 வயதான பிரிட்டோரியஸ், எதிர்வரும் காலங்களில் ரி-20 மற்றும் பிற குறுகிய வடிவத்திலான கிரிக்கெட்டில் கவனத்தை செலுத்துவதற்காக கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிரிட்டோரியஸ் இதுவரை 30 ரி-20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் தென்னாபிரிக்கா அணிக்காக விளையாடியுள்ளார்.
மேலும், இரண்டு உலகக்கிண்ணத் தொடர்களில் தென்னாபிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பாகிஸ்தானிக்கு எதிரான ரி-20 போட்டியில் இவர் 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தான் சர்வதேச ரி-20 கிரிக்கெட்டில் தென்னாபிரிக்க பந்து வீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு ஆகும்.