மெர்சிசைட்டில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் ஹோட்டலுக்கு வெளியே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, வன்முறைக் குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோஸ்லியின் ரிப்லர்ஸ் லேன் பகுதியில் அமைந்துள்ள சூட்ஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், நோஸ்லியில் உள்ள சூட்ஸ் ஹோட்டலுக்கு அருகே மக்கள் கூடியிருந்ததையும், ஒரு பொலிஸ் வேன் தீப்பிடித்ததையும் காட்டுகிறது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக, உதவி தலைமை காவலர் பால் வைட் கூறினார்.
‘பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் காவல்துறை வாகனங்கள் சேதப்படுத்தப்படுவது அவமானகரமானது’ என்று அவர் மேலும் கூறினார்.
சம்பவத்தின் ஆதாரங்களை பொலிஸார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை விட, ஏதேனும் ஆதாரங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.