சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான தீர்மானம் இன்று(வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவினால் குறைப்பதற்கு பிரிமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலொன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விற்பனை விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.