மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு கோரி மீனவர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
சென்னை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் மீனவர்களினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடற்துறை வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மீனவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகு கட்டுவதற்கு அனுமதியை பெற்று தர வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.