அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
பர்மிங்கம் மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்தது.
அதன்படி தனது முதல் இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடய இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 393 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
அவ்வணி சார்பாக ஜோ ரூட் ஆட்டமிழக்காது 118 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க ஜொனி பேர்ஸ்டோவ் 78 ஓட்டங்களையும் சாக் கிரௌலி 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுரேலியா அணி சார்பாக நாதன் லியோன் 4 விக்கெட்களையும் ஜோஷ் ஹசில்வுட் 2 விக்கெட்களையும் ஸ்கொட் போலண்ட் மற்றும் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியனர்.
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிஸிற்காக விளையாடிவரும் அவுஸ்ரேலியா அணி நேற்றைய ஆட்டநேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்களை பெற்றிருந்தது.