அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, சாய்ந்தமருது, பெரியநீலாவணை உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளில் சிலர் தலைக்கவசம் இன்றி பொதுப் போக்குவரத்தை குழப்பும் வகையில் அதி சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிளில் அதிகபடியான ஒலி எழுப்பி பொது மக்களை அச்சமூட்டிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி பாராளுன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட சிலர் முறைப்பாடுகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு இருப்பினும் குறித்த நபர்கள் வீதி போக்குவரத்து சட்டத்தை மதிக்காமல் தொடர்ச்சியாக பாடசாலை நாட்கள் அலுவலக நாட்களிலும் மிக வேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறான உயிர் சேதத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்ய பொலிஸார் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.