சுஹாய் சம்பியன்ஷிப் தொடரில் பிரிட்டனின் ஜெமி முர்ரே மற்றும் நியூசிலாந்து வீரர் மைக்கேல் வீனஸ் ஜோடி நான்காவது முறையாக ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளது.
அமெரிக்க ஜோடியான நதானியேல் லாம்மன்ஸ் மற்றும் ஜாக்சன் வித்ரோவை 6-4 6-4 என்ற கணக்கில் ஒரு மணி நேரம் 22 நிமிடங்களில் வீழ்த்தி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
சீனாவில் பெற்றுக்கொண்ட இந்த வெற்றியின் மூலம் ஏடிபி இரட்டையர் அணி தரவரிசையில் இந்த ஜோடி 3,325 புள்ளிகளுடன் மூன்று இடங்கள் முன்னேறி ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதேவேளை இந்த வாரம் இடம்பெறவுள்ள நிட்டோ ஏடிபி இறுதிப் போட்டிக்கான தகுதி வாய்ப்புகளை உயர்த்துவதே தமது நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
டல்லஸ், பாஞ்சா லூகா மற்றும் ஜெனிவாவிலும் வெற்றி பெற்று இந்த ஜோடி இந்த ஆண்டு நான்கு முறை பட்டங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கத்து.