இலங்கை மற்றும் ஆபிகானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி தற்போது பல்லேகலையில் ஆரமபமாகியுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ள நிலையில் போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பமாகவுள்ளார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் இப்போட்டியில் வணிந்து ஹசார்ங்க மற்றும் மகேஷ் தீக்ஷண ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக துணித் வெல்லலாகேயும் அகில தனஞ்சயவும் இலங்கை அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம் இத்தொடரில் ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும் முனைப்போடு ஆப்கான்சிதான் அணி களமிறங்குகின்றமை குறிப்பிடத்த்க்கது,.