கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியிலுள்ள உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மல்வானையில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரைக்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அங்கிருந்த தேரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.