அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்தனர் என தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணம் சார்லொடி நகரில் உள்ள குடியிருப்பில் சிலர் ஆயுதங்களுடன் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அந்த வீட்டில் பதுங்கி இருந்த நபர்கள் போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
மேலும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய ஒரு நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் தப்பியோடியதுடன் , தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.