அடுத்த 36 மணி நேரத்திற்கு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இதன்படி சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மி.மீ. 150 அளவில் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் .அதிகபட்சமாக மி.மீ 100க்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.