”நாட்டில் அனைத்து தேர்தல்களும் உரிய காலத்தில் நடத்தப்படும்” என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யார் என்ன சொன்னாலும் குறித்த நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாமல்
சுயேச்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும்.
ஏனைய கட்சிகளிடமும் ஆதரவைப் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.