கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலையின் 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
அந்தக் பாடசாலையில் கல்வி கற்கும் 5 வயது முதல் 10 வயது வரையிலான சிறுவர்கள் குழுவொன்றே இந்தக் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
குளவி தாக்குதலின் போது, மாணவர்களைக் காப்பாற்ற முயற்சித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிலரும் குளவி தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளனர்
இதேவேளை குளவி தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சிகிச்சைக்காக கெக்கிராவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.