வீட்டுக்கு வீடு வளர்;க்க கூடிய ஒரு மரம் என்றால் அது தென்னை மரம் தான்.
புரதச் சத்து, மாவுச் சத்து, கல்சியம், இரும்பு உள்ளிட்ட வைட்டமின் சி, நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளடங்கியுள்ளன.
தேங்காயை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கல்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பொஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பொஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
தேங்காய் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரண்டு மடங்காகக் அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் பருவகால நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.
இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.
தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.