நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் உறுப்பினராகவும் செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை மேலும் நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ணவினால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்மனுதாரர்களுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
அதனையடுத்து, குறித்த முறைப்பாட்டை எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி மீளப்பெறுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அன்றைய தினம் வரை பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீடிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.