ஜக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பரப்புரை கூட்டம் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் -நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














