தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதித் தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையென தெரிவித்து இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இதேவேளை தற்போதைய இடம்பெறும் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, எந்தவொரு வேட்பாளர்களும் 50 வீதத்திற்கு மேலதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் விருப்பு வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.