2024 ஜனாதிபதி தேர்தலில் வௌியான முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,620,098 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதன்படி சஜித் பிரேமதாச 4,347,703 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,292,575 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
இதற்கமைய, 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத காரணத்தினால் தற்போது இரண்டாம் கட்ட விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது