சிங்கப்பூரில் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய போது பல்வேறு பரிசுகளைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வர்த்தக, தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றிய சுப்ரமணிய ஈஸ்வரனுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி 13 வருடங்களாக சிங்கப்பூர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் இவர், போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் பல்வேறு நபர்களிடம் இருந்து 03 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பெறுமதியான அன்பளிப்புகளை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாகவும், அந்நாட்டு நீதிமன்றத்தினால் இன்று இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.