யாழ். மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ANFREL (Asian Network Free Elections) தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
இச் சந்திப்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது
இதில் ANFREL தேர்தல் கண்காணிப்பு குழுவின் சர்வதேச கண்காணிப்பாளர் ஹெரி விபோவோ ரிக்சாக்சொனா (Mr.Hery Wibowo Trisaksono) மற்றும் எஸ். கலாராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்