கிழக்கு மாகாண மீனவர் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவிற்கும் இடையே இன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ரீதியாக சிறு அளவில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
விசேடமாக சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் ஆளுநரிடம் எடுத்துக்கூறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது