ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பின்னரும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதல் குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திறனை அழிப்பதும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முதன்மையான அரசால் முன்வைக்கப்படும் அணுசக்தி அச்சுறுத்தலை நிறுத்துவதுமே எங்கள் நோக்கமாகும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் மிரட்டலான ஈரான் இப்போது சமாதானத்தை ஏற்க வேண்டும், இல்லையென்றால் எதிர்கால தாக்குதல்கள் மிகப் பெரியதாக இருக்கும் எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.