• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்! -ஆனந்த விஜேபால

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய  பாதாள உலகக்  குழுவினரைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  பாதாள உலகக் குழுவினர் தொடர்பான எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இன்று (28) அரசங்க தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி ஆட்சிபீடத்திற்கு வரும் போது இந்த நாடு இருந்த நிலை பொருளாதார பிரச்சனை, நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை எனப் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.

அந்த சவால்களை வெற்றிக்கொண்டு இந்த 10 மாதங்களாக நாங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் உங்களுக்கு தெரியும்.  குறிப்பாக நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனை, நீதியை நிலைநாட்டுவதில் இருந்த சிக்கல்கள் தொடர்பிலும் பல சவால்களை சந்திக்க நேர்ந்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் மற்றும் மோசடி என 3 பிரதான சவால்கள் எங்கள் முன் இருந்தன. இதனை கட்டுப்படுத்த வேண்டும் முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் சட்டத்தை முறையாக, கடுமையாக நடைமுறைபடுத்தினோம். இதனால் நாட்டில் பல இடங்களில் துப்பாக்கி சூட்டு சம்பங்கள் அதிகரிக்க தொடங்கியது.

பலரை நாங்கள் தொடர்ச்சியாக கைது செய்தோம். போதைப்பொருள் கடத்தல் பல முறியடிக்கபட்டன. நாட்டை பாதுகாக்க பல நடைமுறைகளை கையாண்டோம். நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை கையாண்டோம்.

நாடு என்ற ரீதியில் பல உபாயங்களை சரியாக கையாண்டு நடைமுறைபடுத்தியதன் விளைவாக நேற்றைய தினம் ”இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த பெக்கோ சமன் உள்ளிட்ட நாட்டின் முக்கிய பாதாள உலகக்குழுவை சேர்ந்த 05 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக கடந்த 7 நாட்களாக இலங்கை பொலிஸ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றபுலனாய்வினர் தொடர்ச்சியாக இந்தோனேசிய பொலிஸாருடன் தொடர்பில் இருந்தார்கள். இவர்களை கைது செய்வது தொடர்பாக உன்னிப்பாக நாங்கள் அவதானம் செலுத்தியிருந்தோம்.

இன்டர்போல் மற்றும் இந்திய உளவுத்துறையும் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார்கள். நாங்கள் பொலிஸாருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கியிருந்தோம் அதன் விளைவாக இவ்வாறு பாதாள உலகத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பலர் தொடர்சியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நீதி அனைவருக்கும் பொதுவானது. தொடர்ச்சியாக பதவிகள் மற்றும் அந்தஸ்த்து என்பன பாராமல் அனைவரும் விசாரிக்கபடுவார்கள். நீதிக்கு மேல் எமது அரசாங்கத்தில் எதுவும் பெரிதல்ல. நீதிக்கு அனைவரும் அடிபணிய வேண்டும் .எங்களுடைய கைது நடவடிக்கை தொடரும்.

தவறு செய்தவர்கள் எங்களது ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை மீண்டும் நாங்கள் தெரிவித்துகொள்கின்றோம்.

இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள்.

அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்களுக்கான தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேபோன்று தான், அது அரசியல் வாதியா, பொலிஸ் அதிகாரியா, பாதாள உலக குழுவை சேர்ந்தவர்களா என்றெல்லாம் பாராமல் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுக்கொடுக்கப்படுவார்கள் என்பதை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துக்கொள்கின்றேன்” இவ்வாறு  ஆனந்த விஜேபால  தெரிவித்துள்ளார்.

Related

Tags: ananda wijepalaathavannewspress meetsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தோனேசியாவில் கைதான இலங்கையர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை!

Next Post

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

2026-03-21
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!
இலங்கை

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

2026-03-21
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை
யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

2026-03-21
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
கிழக்கு மாகாணம்

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-03-21
Next Post
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

இட்லி கடை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

இட்லி கடை திரைப்படத்தின் புதிய அப்டேட்!

வரலாற்று சிறப்புமிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் பெருமிதம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

0
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

0
ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.