தாய்லாந்தில் 500 நாடாளுமன்ற ஆசனங்களுக்கான பொதுத்தேர்தல் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது
பலம் வாய்ந்த 3 கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டிருந்த நிலையில் இன்று வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ள நிலையில் மக்கள் கட்சிக்கு இந்த தேர்தல் சவாலானதாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தலைமையிலான பழைமைவாத கட்சி மற்றும் ராணுவ ஆதரவுடனான பும்ஜைதாய் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் கட்சிக்கிடையில் பாரிய போட்டி நிலவுகின்றது.
தாய்லாந்தில் 57 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் இன்று காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமது வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை கடந்த 3 ஆண்டுகளுக்குள் நான்காவது பிரதமரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
எவ்வாறாயினும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் எந்தவொருடம் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்பெறாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்
















