அவசர சூழ்நிலைகளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை க்கு வருகை தரும் நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடன், அடிப்படை உயிர் காக்கும் திறன் (Basic Life Support – BLS) பயிற்சியின் நான்காம் கட்டம் இன்று (10) வைத்தியசாலை வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த பயிற்சி, வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம்.ரிபாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டதுடன், தெரிவுசெய்யப்பட்ட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார சேவை உதவியாளர்கள் இதில் பங்கேற்றனர். அவசர நிலைகளில் நோயாளிகளுக்கு உடனடி மற்றும் திறமையான சிகிச்சை வழங்கும் வகையில், உயிர்காக்கும் அடிப்படை நுட்பங்கள், செய்முறை விளக்கங்களுடன் இப்பயிற்சியில் கற்பிக்கப்பட்டன.
இதன் மூலம் வைத்தியசாலையின் சேவைத் தரம் மேலும் மேம்படுவதோடு, அவசர மருத்துவ சேவைகளில் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதில் இப்பயிற்சி ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















