அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக்கொ*லை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று(22) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அல்லைப்பிட்டி பகுதியில் ஹயஸ்வாகனத்தில் பயணித்த வேளை பொலிசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அல்வினோ அருள்பயாஸ் (வயது 17) இவரின் குடும்பத்தாருக்கு பொலிசாரால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், பொலிஸ் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் பொலிஸார் தம்மை கண்காணித்து வருகின்றதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுவரை சுட்டுக் கொலை செய்த பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.













