• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வெற்று காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/17
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாக்கூடியவாறு துப்பரவு இன்றி உள்ள வெற்று காணிகளின் உரிமையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும் அதை மீறி அலட்சியம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் நேற்று (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில் உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.

ஏற்கனவே டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்க பட்டுள்ளது

வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன

அதேவேளை சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர்.

எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும்.

டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும்.

இதேவேளை, அந்த ஆலய மதகுரு உட்பட ஆலைய சூழல் டெங்கு நோய் பரவும் சூற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலையங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம்.

இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது

எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம் எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அனுகியுள்ளோம் வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார்.

Related

Tags: BatticaloaDengue casessrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

Next Post

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

Related Posts

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!
இலங்கை

2026-03-17
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!
இலங்கை

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

2026-03-17
மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கான விழிப்புணர்வு

2026-03-17
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

நாளைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இரத்து!

2026-03-17
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!
இலங்கை

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

2026-03-17
மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!
இலங்கை

மத்திய கிழக்கு போரின் விளைவுகளைக் கையாள மூன்று குழுக்கள் நியமனம்!

2026-03-17
Next Post
 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

 எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும்: 20% நுகர்வைக் குறைக்க இலக்கு!

2026 உலகக் கிண்ணம்; ஃபிஃபாவிடம் ஈரான் முன்வைத்த கோரிக்கை!

பிரித்தானிய தொழில்நுட்பத் துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த நிதியமைச்சர் ரீவ்ஸின் புதிய திட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

ஈரான்  மீது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் – ஈரானின் துணை இராணுவப் படையான ‘பசிஜ்’ (Basij) அமைப்பின் தளபதி உயிரிழப்பு!

0
ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

ஹெரோயினுடன் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு; இருவர் கைது!

0
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்!

0
அரச ஊழியர்களுக்கு  சம்பள உயர்வு இல்லை-ஜனாதிபதி அறிவிப்பு!

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

0
ஐஆர்ஏ குண்டுவெடிப்பு வழக்கு: லண்டன் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கிறார் ஜெர்ரி ஆடம்ஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.