யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் இன்றைய தினம் வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது .
இந்தத் துப்பாக்கி எதற்காக வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் குற்றச் செயல்களுடன் இதற்குத் தொடர்புள்ளதா? அல்லது வேறு எவரிடமிருந்தாவது இது கைமாற்றப்பட்டதா? என்ற கோணத்தில் இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.














