மதுபானசாலைகளை மூடும் உத்தரவு பற்றி நீண்ட நாள்களாகப் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது நிலையில் புதிய அரசுக்கு மக்கள் நீதி மையம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்,
“புதிய அரசுக்கு வாழ்த்துகள். மதுக்கடை மூடும் உத்தரவு வரவேற்கத்தக்கது. இதுபற்றி நீண்ட நாள்களாகப் பேசப்பட்டு வந்தது. தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அவரை திரைப்பட நடிகராக மட்டும் பார்க்காமல், அவருக்கு வேறு கடமைகளும் உண்டு. எந்தத் துறையிலிருந்து வேண்டுமானாலும் வரலாம். எங்கள் துறையிலிருந்து (சினிமா) வந்திருப்பது பெருமையாகத்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யக் கட்சி, எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

















