தமிழக முதல்வர் விஜய் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியையும் அமைத்துள்ளது.
முதல்வர் விஜய் உள்ளிட்ட 35 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.
நீண்ட காலத்துக்குப் பின்னர் , கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் தமிழக வெற்றி கழகம் வாய்ப்பு தந்திருக்கின்றமை பரவலாக வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

















