பிரித்தானியாவில் இந்த மாதத்தில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பதிவாகி வரும் சாதனை வெப்ப அலைக்கு (Heatwave) மத்தியில், திறந்தவெளி நீர்நிலைகளில் குளிப்பதற்காகச் சென்ற 9 பேர் நீரில் மூழ்கி இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் ஏழு சிறுவர்களும் இரண்டு இளைஞர்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்த 9 மரணங்களும் இந்த ஒரு வாரத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வேல்ஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த ஞாயிற்று கிழமை நீராட சென்ற 72 வயது மூதாட்டி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் கடந்த திங்கட்கிழமை கடற்கரையில் தத்தளித்த தனது குடும்பத்தினர் இருவரைக் காப்பாற்ற கடலில் குதித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது தவிர, அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள கடற்கரை ஒன்றில் குளித்த ஒரு இளைஞனும் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதேவேளை, கடும் வெயில் காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்படும் ‘சூடாக்க வாதம்’ அல்லது ‘அதிவெப்பத் தாக்கம்’ (Heatstroke) குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவ ஆலோசனைகளை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














