• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

Anoj by Anoj
2021/08/17
in கிரிக்கெட், விளையாட்டு
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஏழாவது ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் நவம்பர் 14ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகம் (டுபாய், அபுதாபி, சார்ஜா) மற்றும் ஓமனில் நடைபெறவுள்ளது.

முதல் சுற்றில் (தகுதி சுற்று) 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் இரண்டாவது சுற்றான சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். 8 நாடுகள் நேரடியாக இரண்டாவது சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும், பி பிரிவில் பங்களாதேஷ், ஓமன், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூகுனியா அணிகள் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஒக்டோபர் 17ஆம் திகதி ஓமனில் நடைபெறும் ஆரம்ப போட்டியில், ஓமன்- பப்புவா நியூகுனியா மோதுகின்றன. மற்றொரு போட்டியில் பங்களாதேஷ்- ஸ்கொட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

22ஆம் திகதியுடன் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைகிறது. 2 பிரிவுகளில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும்.

சுப்பர் 12 போட்டிகள் ஒக்டோபர் 23ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
குழு ஒன்றில் நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அவுஸ்ரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் தகுதி சுற்றுப் போட்டிகளில் தேர்வாகும் இரு அணிகள்.

குழு இரண்டில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றுப் போட்டிகளில் தேர்வாகும் இரு அணிகள்.

நவம்பர் 8ஆம் திகதியுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் அரையிறுதி போட்டிகள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் திகதி டுபாயில் நடைபெறுகின்றது.

ஏழாவது ரி-20 உலகக்கிண்ண தொடர் கடந்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இத்தொடர் இரத்து செய்யப்பட்டு தொடரை நடத்தும் உரிமம் 2022ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு வழங்கப்பட்டது.

இதனால், ஏழாவது ரி-20 உலகக்கிண்ண தொடரை நடத்தும் உரிமம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்தியாவிலும் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதால், இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த தொடர், இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் சார்பாகவே நடைபெறுகின்றது.

blank

blank

blank

Related

Tags: இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைகிரிக்கெட் இரசிகர்கள்சர்வதேச கிரிக்கெட் சபைரி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணைரி-20 உலகக்கிண்ண தொடர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகளுக்கு பூட்டு

Next Post

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!

Related Posts

2026 பீஃபா உலகக் கிண்ணம்; 5 ஆம் நாள் ஆட்ட முடிவுகள் பெரும் அதிர்ச்சி!
உதைப்பந்தாட்டம்

2026-06-16
குகதாஸ் மாதுலன் அபாரம்; சூப்பர் ஓவரில் இந்தியாவை தோற்கடித்த இலங்கை!
ஆசிரியர் தெரிவு

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?
கிரிக்கெட்

2026-06-15
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 
உதைப்பந்தாட்டம்

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

2026-06-15
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

2026-06-15
டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; பாகிஸ்தானை 64 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!

2026-06-15
Next Post
இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!

இந்தியா மீதான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இ-விசா முறை அறிமுகம்!

நல்லூர் திருவிழா- பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

0
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

0
கடல்கொந்தளிப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

சமூக ஊடக தடை உத்தரவு தொடர்பில் அமெரிக்கா அரசாங்கத்திடம் தெளிவுப்படுத்த பிரித்தானிய கடும் முயற்சி !

2026-06-16

Recent News

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

வேல்ஸில் ‘குழந்தை பராமரிப்பு’ திட்டத்திற்கு கூடுதலாக 55 மில்லியன் பவுண்டுகள் நிதி ஒதுக்கீடு!

2026-06-16
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!

தன்னை கைது செய்வதற்கு எதிராக கோட்டாபய மனுத்தாக்கல்!

2026-06-16
பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

பிரித்தானியாவின் ‘தேம்ஸ் வாட்டர்’ நிறுவன உடன்படிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு!

2026-06-16
டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

டித்வா பாதிப்பு: உள்நாட்டு ரயில் பாதைக்கு 300 மில்லியன் டொலர் சேதம் என மதிப்பு!

2026-06-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.