வட வேல்ஸின் கொல்வின் பே பகுதியில் நள்ளிரவில் பொலிஸாரின் வாகனத்தை மோதிவிட்டு, அதிவேகமாக தப்பியோட முயன்ற கார் ஓட்டுநருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொல்வின் பே, பிரின்சஸ் டிரைவ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஆடம் எவன்ஸ் (Adam Evans) என்பவரே இவ்வாறு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியமை, ஏற்கனவே வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தும் காரை செலுத்தியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் போதைப்பொருள் சோதனைக்காக இருமுறை இரத்த மாதிரி வழங்க மறுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் கொக்கைன் (Cocaine) மற்றும் கஞ்சா (Cannabis) ஆகிய போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.














