6 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று (06) கோரகாதெனிய நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதுடைய கோரகாதெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.













