இந்திய டெஸ்ட் அணியின் தலைவர் சுப்மன் கில் சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் ஒரு அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் அபாரமாக விளையாடிய அவர் 126 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலைவராக தனது ஆறாவர் சதத்தை பதிவு செய்ததுடன், தலைவராக 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தலைவராக 1,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்கள் எடுத்த 101 வீரர்கள் உள்ளனர்.
அவர்களில் தலைவராக 82.76 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் சுப்மன் கில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் பிராட்மேன் மட்டும் 101.51 சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்ககாரா 69.6 சராசரியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
குறிப்பிடத்தக்க வகையில், டெஸ்ட் வரலாற்றில் வேறு எந்த தலைவரும் 70க்கும் மேற்பட்ட சராசரியை பதிவு செய்யவில்லை.
மேலும், இந்திய டெஸ்ட் அணியின் தலைவர்களில் மிக வேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.
சுப்மன் கில் வெறும் 15 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.















