ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் புகழ்பெற்ற ‘அராம்கோ’ (Aramco) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது திடீர் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சவூதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் முக்கிய கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சில நாட்களிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேட்டோ (NATO) அமைப்பின் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு இணையான இந்த ஒப்பந்தத்தின்படி, இதில் கையெழுத்திட்டுள்ள உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவை இணைக்கும் முக்கிய கடல்வழிப் பகுதியான ‘பாப் அல்-மந்தெப்’ (Bab al-Mandab) ஜலசந்திக்கு அருகே அமைந்துள்ள ‘மோகா’ (Mokha) துறைமுகத்தின் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக அத்துறைமுகம் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.







