இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (15) அதிகாலை கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 36 பேர் பலத்த காயங்களுடனும், 77 பேர் சிறு காயங்களுடனும் பாதிக்கப்பட்டனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து 341 பின் அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 2022-ல் மேற்கு ஜாவாவில் நூற்றுக்கணக்கானோரைக் கொன்ற நிலநடுக்கத்திற்குப் பிறகு, தென்கிழக்கு ஆசிய நாட்டைத் தாக்கிய மிக மோசமான நிலநடுக்கம் இது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுமார் 1,300 வீடுகள் சேதமடைந்துள்ளன.








