நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிர (27) இரவு 09.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை இன்றிரவு 09.00 மணி வரை அமுலில் இருக்கும்.
எனவே, குறித்த பகுதிகளில் வாழும் பொது மக்கள் மண்சரிவு, பாறைகண் உருண்டு விழுதல் மற்றும் மரம் சரிந்து விழுதல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.


















