ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 40இலட்சத்தைக் நெருங்குகிறது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் வைரஸ் தொற்றினால் 39இலட்சத்து 96ஆயிரத்து 616பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 92ஆயிரத்து 829பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 12ஆயிரத்து 633பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 35பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 46ஆயிரத்து 187பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 217பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 37இலட்சத்து 57ஆயிரத்து 600பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.