துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 65இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 65இலட்சத்து 19ஆயிரத்து 016பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் துருக்கியில் இதுவரை 58ஆயிரத்து 377பேர் உயிரிழந்துள்னர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 20ஆயிரத்து 962பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 271பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் ஐந்து இலட்சத்து 647பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 633பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 59இலட்சத்து 59ஆயிரத்து 992பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.