ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 43இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக 43இலட்சத்து ஆறாயிரத்து 757பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 13ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 94ஆயிரத்து 910பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 403பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 411பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 47ஆயிரத்து 247பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 336பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 40இலட்சத்து 64ஆயிரத்து 600பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.