விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.
இந்த தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கேமரூன் நோரியும் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பவுலா படோசாவும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், பிரித்தானியாவின் கேமரூன் நோரி, ஜோர்ஜியாவின் நிகோலோஸ் பசிலாஷ்விலியை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், கேமரூன் நோரி, 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் பவுலா படோசாவும் பெலராஸின் விக்டோரியா அஸரன்காவும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பவுலா படோசா, 7-6, 2-6, 7-6 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.