அவுஸ்ரேலியாவுக்கு எதிரான நாளைய இருபதுக்கு இருபது போட்டிக்கான அணியில் இருந்து இலங்கை அணியின் வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5வது இருபதுக்கு இருபது போட்டி நாளை மெல்போர்ன் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளைய போட்டியில் இருந்து இலங்கை அணியின் அவிஷ்கா பெர்னாண்டோ விலகியுள்ளார்.
குறித்த காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு முழுமையாக குணமடைய குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.