பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்பிஃயா வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்பிஃயா, ரஷ்யாவின் கரேன் கச்சனோவ்வை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், கார்லோஸ் அல்கராஸ், 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதிபெற்றார்.