ஓல்ட் ட்ரபோரட் மைதானத்தில் எதிர்வரும் புதன்கிழமை தொடங்கும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஒலி ரொபின்சனுக்குப் பதிலாக ஜேம்ஸ் அண்டர்சன் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
ஹெடிங்லியில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற போதும் தொடரில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா முன்னிலை வகிக்கின்றது.
3 ஆவது டெஸ்டில் அண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவரது சொந்த மைதானத்தில் இடம்பெறும் போட்டிக்காக அணிக்குள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஹெடிங்லியில் இடம்பெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் முதுகு வலியால் பாதிக்கப்பட்ட ஒலி ரொபின்சனால் முதல் இன்னிங்சில் 11 ஓவர்கள் மாத்திரமே வீசமுடிந்தது.
இந்நிலையில் 4ஆவது டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட், சாக் கிரௌலி, மொயின் அலி, ஜோ ரூட், ஹரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜொனி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஸ்டூவர்ட் பிரோட், ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோர் விளையாடவுள்ளனர்.